Sangathy
Cinema World

தில் ராஜுடன் மீண்டும் இணைகிறார் விஜய் தேவரகொண்டா..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.

அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். படக்குழுவினர் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு ரத்தக்கறை படிந்த கை வாளை ஏந்தியபடி உள்ள காட்சிகள் அமைக்கபட்டுள்ளது.

இது ஒரு கிராமப்புற ஆக்ஷன் கதைக்களத்துடன் இருக்கும் படம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை, ரவிகிரண் கோலா இயக்குகிறார். இதற்கு முன் ராஜா வாரு ராணி காரு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை தில் ராஜு சார்பாக ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இது தில் ராஜு தயாரிக்கும் 59 படமாகும்.

தில் ராஜூவுடன் விஜய் தேவரகொண்டா இணையும் இரண்டாவது படம் இதுவாகும். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

போதைப் பொருள் கடத்தல் வழக்கு : இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜர்..!

tharshi

விராட் – அனுஷ்கா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை..!

Lincoln

காதல் காமெடியுடன் மார்ச் 29 OTT-யில் வெளியாகும் ‘பிரேமலு’..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy