Sangathy
Cinema World

டோலிவுட்டில் இருந்து தடை செய்துடுவோம்னு தயாரிப்பாளர் மிரட்டுறார் : இளம் நடிகை பரபரப்பு புகார்..!

ரக்ஷனா படத்தை விளம்பரம் செய்ய வரவில்லை என்றால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை செய்வோம் என தயாரிப்பு தரப்பு தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார் பாயல் ராஜ்புட். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டிருக்கிறார்.

ஆர்.டி.எக்ஸ். 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் பாயல் ராஜ்புட். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார். இந்நிலையில் தான் நடித்த ரக்ஷனா படத்தின் தயாரிப்பாளர் தன்னை மிரட்டுவதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்தார் பாயல்.

ரக்ஷனா பற்றி அவர் கூறியதாவது,

2019ம் ஆண்டு, 2020ம் ஆண்டு வாக்கில் நான் நடித்த படம் ரக்ஷனா. முதலில் அதற்கு 5Ws என பெயர் வைத்திருந்தார்கள். படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது எனக்கு கிடைத்திருக்கும் வெற்றியை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். எனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமல், விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.

ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களால் டேட்ஸ் இல்லை என என் டீம் சொல்லியும் தெலுங்கு சினிமாவில் இருந்து தடை செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்கள். பாக்கியை செட்டில் செய்யுங்கள் என பரிந்துரைத்து ரக்ஷனாவின் டிஜிட்டல் ப்ரொமோஷன் குறித்து எங்கள் அணி பேச்சுவார்த்தை நடத்த முயன்றது. ஆனால் அவர்கள் இறங்கி வர மறுத்துவிட்டார்கள். மேலும் என் இமேஜ் பாதிக்கப்படும் வகையில் என் பெயரை பயன்படுத்தியிருப்பதை ஏற்க முடியாது.

அண்மையில் நடந்த மீட்டிங்குகளில் அவர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். அவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல், என் அனுமதி இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்வதால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரக்ஷனா பட தயாரிப்பாளர்கள் பாயல் ராஜ்புட் மீது கடந்த மார்ச் மாதமே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரக்ஷனா படத்தை விளம்பரம் செய்ய பாயல் டேட்ஸ் கொடுக்க மறுக்கிறார் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பிரதீப் தாகூர் புகார் அளித்தார். ரக்ஷனாவை ஏப்ரலில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டார். ஆனால் அது நான்கு ஆண்டுகள் பழைய படம் என்றும், அதனால் தியேட்டர் வேண்டாம் ஓடிடியில் ரிலீஸ் செய்யுங்கள் என்றும் கூறுகிறார் பாயல். அவருக்கு கொடுக்க வேண்டிய ரூ. 6 லட்சம் பாக்கியை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பாயல் வர வேண்டும் என்றார்கள். பாயல் வர மறுத்துவிட்டார்.

மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன், ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஐஎம்எம்பிஏ மும்பையிலும் பாயல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாயல் நடித்திருப்பதால் அந்த பட விளம்பரத்தின்போது அவரின் பெயரை பயன்படுத்த பிரதீப்புக்கு அனைத்து உரிமையும் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உலக சினிமாவில் முதல் முறை : இரு நாய்கள் மட்டுமே நடித்த படம்..!

tharshi

ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இவர் ஐபிஎல் மேட்ச் பார்த்த லோகேஷ் கனகராஜ்..!

tharshi

ரஜினி 171 படத்துக்கு ‘கழுகு’ டைட்டில்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy