Sangathy
World Politics

பிடித்த வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறிய பெண்..!

அமெரிக்காவை சேர்ந்த பெண் வலேரி வால்கோர்ட். இவர் கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். அப்போது இவர் ரூ.83 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். ஆனாலும் தான் பார்த்த வேலையில் அவருக்கு போதிய திருப்தி கிடைக்கவில்லை.

இதனால் அவர் தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்சுக்கு சென்றார். அங்குள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கினார். அதில் அவருக்கு ரூ.25 லட்சம் வரை மட்டுமே சம்பளமும், வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய 5 வார விடுமுறையும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வலேரி கூறுகையில்,

முன்பை விட தற்போது குறைவான சம்பளம் என்பது எப்போதும் எனக்கு வருத்தத்தை தந்ததில்லை. அமெரிக்காவில் இருந்ததை விட நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நாட்டின் கலாச்சாரம், எனது ஓய்வு நேரம் என நான் இங்கு மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.

Related posts

ஈரானுக்கு மிரட்டல் விடும் இஸ்ரேல்..!

tharshi

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் : இரண்டு தளபதிகள் உயிரிழப்பு..!

tharshi

தைவானில் நிலநடுக்கம்.. அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை : சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்ற ஜப்பான்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy