Sangathy
World Politics

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் : இரண்டு தளபதிகள் உயிரிழப்பு..!

இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோல் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி குழுவும் இஸ்ரேல் நோக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் இருந்தும் ஈரான் ஆதரவு பெற்ற குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.

இதனால் இஸ்ரேல் அருகில் உள்ள லெபனான், சிரியா, ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் குழுக்களை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளது. தாக்குதலின்போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் முகமது ரீசா ஜஹேதி என்பவர் ஆவார். இவர் லெபனானில் குவாத்தை படையை வழிநடத்திச் சென்ற முக்கிய தளபதி ஆவார். 2016 வரை சிரியாவில் பணயாற்றியுள்ளார்.

இவருடன் துணை தளபதி முகமது ஹதி ஹஜ்ரியாஹிமி-யும் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் 5 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தளபதி உடன் ஹிஸ்மில்லா உறுப்பினர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். தூதரக பாதுகாப்பில் இருந்த இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

தூதரகத்தின் முக்கிய கட்டிடம் தாக்கப்படவில்லை எனவும், அதில் ஈரான் தூதர அதிகாரிகளின் வீடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தூதர் ஹொசைன் அக்பாரி உறுதியளித்துள்ளார்.

ஈரான் இதற்கு எப்படியும் பதிலடி கொடிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் தூதரகம் மீதான இந்த தாக்குதல் மத்திய கிழக்கு தரைக்கடை பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி மற்ற நாடுகள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் சிரியாவுக்கான ஈரான் ஆலோசகர் கொல்லப்பட்டார் அதேபோல் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஈரான் ஆலோசர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் ஈரான் எல்லையில் உள்ள சிரியா மாகாணத்தில் உள்ள நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ஆலோசகர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஈரானிலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நோக்கி ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் அரிதாகவே ஒப்புக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் 90 பலஸ்தீனர்கள் பலி..!

Lincoln

Venom of Trump, Tucker Carlson & Murdoch’s Fox News

Lincoln

3-வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy