Sangathy
Cinema World

ஆனந்த் அம்பானியின் திருமணம் : மும்பைக்கு படையெடுக்கும் உலக பிரபலங்கள்..!

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் இன்று (ஜூலை 12) திருமணம் நடைபெறுகிறது.

மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருமண விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளெய்ர் தனது மனைவியுடன் மும்பையிலுள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டுள்ளார்.

இத்திருமண விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாருக் கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா அத்வானி, சன்னி தியோல் என பெருந்திரளாக பல தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

Related posts

பிரஞ்சு சினிமாவின் பழம்பெரும் நடிகர் அலைன் டெலோன் காலமானார்..!

Tharshi

பரத் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியீடு..!

tharshi

கர்ப்பமான ஆண்ட்ரியா.. : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy