Sangathy
Cinema World

பரத் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியீடு..!

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. “ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்பொழுது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு உருவாகியுள்ளது இத்திரைப்படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

Related posts

போதைப் பொருள் கடத்தல் வழக்கு : இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜர்..!

tharshi

மணிரத்னத்தின் படத்தை திரையில் மாறுவேடத்தில் பார்த்து ரசித்த சச்சின்..!

tharshi

சூப்பர் ஸ்டார் பட நடிகையின் அம்மா மீது மோகம் : ஷூட்டிங்கில் ஆசை காட்டி மோசம் செய்த காமெடி நடிகர்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy