Sangathy
News

எரிபொருள் விநியோகத்திற்கு தடையேற்படுத்திய தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

Colombo(News 1st) எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட மாட்டாது: இந்திய கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு

John David

John David

சீனாவில் சிறுவர்களிடையே பரவும் நிமோனியா தொற்று; உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை கோரியுள்ளது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy