Sangathy
News

IMF உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவுள்ளது

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடந்த மாதம் 22 ஆம் திகதி வழங்கப்பட்டது.

48 மாத காலப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கடன் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பிரதான கொள்கைகளை சட்டமாக மாற்றுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Minister raises power cut threat to justify tariff hike in New Year

Lincoln

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கென்ய பிரஜை கைது

Lincoln

New Air Force Commander

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy