Sangathy
News

பொருளாதார வங்குரோத்து நிலைக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று(18)

Colombo (News 1st) நாடு பொருளாதார வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(18) முதன்முறையாக கூடவுள்ளது.

தெரிவுக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட தெரிவிக்குழு கடந்த 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

14 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 9 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் 5 உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

Related posts

Argument between TNA MP and police: Public Security Minister calls for report

Lincoln

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி, சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் பொறுப்பு கூறவேண்டும் – ரொஷான் ரணசிங்க

John David

Sinhala translation of Quran presented to Bharain Ambassador

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy