Sangathy
News

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி இணக்கம்

Colombo (News 1st) வறட்சியான வானிலை காரணமாக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், பயிர்ச்செய்கை பாதிப்பு தொடர்பான மதிப்பீடுகளை ஆரம்பிக்குமாறு விவசாயம் மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், எம்பிலிபிட்டிய விவசாயிகளுக்கு வெலிஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது குறிப்பிட்டளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 15 – 20 வீதமான செய்கைகளை பாதுகாக்க முடியுமென அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Related posts

கட்டாரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி; ஒருவரை காணவில்லை

Lincoln

Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்று தலவாக்கலையில் தடம்புரண்டுள்ளது. இன்று மாலை 04.50 மணியளவில் ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை தடமேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலையக ரயில் மார்க்கத்திலான இரவு தபால் ரயில் இன்று தாமதமடையும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Lincoln

ஏப்ரல் மாத இறுதிக்குள் 2002 கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவார்கள் – அசோக பிரியந்த

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy