Sangathy
News

அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் இலங்கை வரவுள்ளார்

Colombo (News 1st) அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர்  Nathaniel C. Fick உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சைபர் பாதுகாப்பு, இணையவௌி சுதந்திரம், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் என்பன தொடர்பில் Nathaniel C. Fick, கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

பெங்களூரில் நடைபெறும் G -20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தில் அமெரிக்க தலைமை பிரதிநிதியாக கலந்துகொள்வதற்காக இன்று அவர் இந்தியா செல்கின்றார்.

Nathaniel C. Fick எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related posts

கச்சத்தீவை மீட்பதாக குப்புசாமி அண்ணாமலை சூளுரை

Lincoln

The Chimponaught of the 21st Century

Lincoln

நாட்டின் தென்மேல் பகுதிகளில் அதிக மழை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy