Sangathy
Business

127 ஆண்டு கால சாம்ராஜ்ஜியத்தில் பிளவு கண்ட “கோத்ரேஜ்” குழுமம்..!

இந்தியாவில் ஒவ்வொரு வீட்டு பீரோ, அலமாரிகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெயர் உலகளவிலும் பரவியுள்ளது, அதுதான் கோத்ரேஜ். அன்னி பெசன்ட் அம்மையார், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற நிறுவனம் இது. 1921 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து ராணி வந்திருந்தபோது கோத்ரேஜ் தயாரிப்பைப் பயன்படுத்தினார். 1897-ம் ஆண்டு கோத்ரேஜ் நிறுவனத்தை ஆர்தேஷிர் கோத்ரேஜ் தொடங்கினார்.

127 ஆண்டுகளாக சோப்பு, வீட்டு உபகரணங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல்வேறு துறைகளில் இயங்கி வரும் கோத்ரேஜ் குழுமம் 2ஆக பிரிவதாக அறிவித்துள்ளது.

கோத்ரேஜ் குழுமத்தை நிறுவிய நிறுவனரின் குடும்பத்திற்கு மத்தியில் இரண்டு கிளைகள் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு புறம் ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் உள்ளனர். மறுபுறம் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் ஆகியோரின் சித்தப்பா வாரிசுகள் தான் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா.

இதன் மூலம், ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மறுபுறம், ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் பட்டியலிடப்படாத கோத்ரேஜ் அண்ட் பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மும்பையில் முக்கியமான பகுதிகளில் உள்ள முதன்மை நிலங்களை மொத்தமாக கைப்பற்றுகின்றனர்.

இனி ஜாம்ஷெட் கோத்ரேஜ் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கட்டுப்பாட்டில் இயங்கும். அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் நிரிகா ஹோல்கர் இந்நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநராக இருப்பார். இதோடு மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் நிலப்பகுதி உட்பட நில தொகுப்பை இவர்கள் நிர்வகிப்பார்கள்.

கோத்ரேஜ் குழுமம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதியின் மகனான பிரோஜ்ஷா கோத்ரேஜ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார். மேலும் ஆகஸ்ட் 2026 இல் நாதீர் ஓய்வுபெற்ற பிறகு தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்பார். பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பிரிவினையை “உரிமைகளின் மறுசீரமைப்பு” என்று கோத்ரேஜ் குடும்பம் குறிப்பிட்டு உள்ளது.

Related posts

Wavenet’s unified IVR solution cuts 30% OPEX for Colombia’s largest telco operator

John David

BUSINESS

John David

SriLankan Airlines wins Best Aviation Sustainability Programme Award for its innovative upcycling of aircraft discards

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy