Sangathy
News

நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று முன் விடுதலையான நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலையான நிலையில், லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் வசிக்க விரும்புவதாகவும் அங்கு செல்வதற்காக கடவுச்சீட்டைக் கோரி ஒன்லைன் மூலமாக ஜூன் 12 ஆம் திகதி விண்ணப்பித்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் தற்போது வசிக்கும் வீட்டிற்கு ஆகஸ்ட் முதலாம் திகதி வருகை தந்த திருவான்மியூர் பொலிஸார் விசாரணை நடத்திய போதிலும் இதுவரை தமக்கான கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை என நளினி தெரிவித்துள்ளார்.

எனவே, பொலிஸார் சரிபார்த்த விபரங்களை கடவுச்சீட்டு அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும், தனக்கான கடவுச்சீட்டை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் நளினி தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி நளினியின் கடவுசீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடிவுறுத்தியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

Lincoln

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்கள் இந்திய தனியார் துறைக்கு வாய்ப்புகளை வழங்கும்: மிலிந்த மொரகொட

Lincoln

Nations reach ‘historic’ deal to protect nature at COP15 -BBC

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy