Sangathy
News

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Colombo (News 1st) பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் கடந்த 09 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,
K.கட்டுபிட்டிய, மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து போக்குவரத்து மற்றும் சமிக்ஞை பிரிவிற்கு பொறுப்பான பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் G.M.H.B.சிறிவர்தன போக்குவரத்து மற்றும் சமிக்ஞை பிரிவில் இருந்து பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் மற்றும் கடமைகளை முன்னெடுப்பதற்காக பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் M.M.குமாரசிங்க குளியாபிட்டி பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பதவியின் கடமைகளை முன்னெடுப்பதற்காக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

Four persons arrested with approx. 551kg of Kendu leaves

Lincoln

No funds for recruiting teachers of English in three provinces

Lincoln

Govt. has forgotten to keep its promise to waive duty on sanitary pads

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy