Sangathy
News

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று(23) பிற்பகல் ஒரு மணியின் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் கூறியுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடை​யே, அத்தனகளு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளை அண்மித்து வௌ்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவங்கொடை, ஜா – எல, கட்டானை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நுவரெலியா, பதுளை, கம்பஹா, மாத்தறை, கேகாலை இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய 10 மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 798 குடும்பங்களைச் சேர்ந்த 2930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சூடானில் இருந்து மேலும் 6 இலங்கையர்கள் மீட்பு

Lincoln

Britain to send Sri Lankan asylum seekers to Rwanda for medical treatment

Lincoln

Lula da Silva sworn in as Brazil president

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy