Sangathy
News

அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் வழிகாட்டல்களை வெளியிட தீர்மானம்

Colombo (News 1st) அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நபரொருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம், உளநலம் பாதிக்கப்பட்ட நபரை வழிநடத்தும் விதம் மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வௌியிடப்படும் என ஆணையாளர் கூறினார்.

டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள்

John David

U.S. asks travellers to India to exercise ‘increased caution’ due to crime, terrorism

Lincoln

Trump gave ‘direct commands’ to ‘ragtag terrorists’ to stage the Capitol attack: former prosecutor

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy