Sangathy
News

சர்வதேச மனக்கணிதத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு யாழில் கௌரவிப்பு

சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய போட்டியில் , இலங்கை சார்பில் கலந்துகொண்டதுடன் Champion பட்டத்தை பெற்ற ஒரே ஒருவர் என்பது பாராட்டுக்குரியது.

இந்நிலையில், அம் மாணவனை கெளரவிக்கும் முகமாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் அவரை போட்டிக்கு தயார் செய்த யாழ் நகர UCMAS கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு UCMAS Jaffna Town Center இன் தலைவர் திருமதி தயானா சந்துரு தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கோசலை மதன் ( சிரேஷ்ட விரிவுரையாளர், சட்டத்துறை, யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு விருந்திராக காயத்திரி கோகுலன் (சட்டத்தரணி) மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பல தரப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சர்வதேச தரத்தில் வெற்றி பெற்ற மாணவனாக கேடயத்தை பல்கலைக்கழக விரிவுரையாளர் கோசலை மதன் அவர்கள் வழங்க 50,000 பணப் பரிசினை சட்டத்தரணி காயத்திரி கோகுலன் மற்றும் தயானா சந்துரு அவர்களும் வழங்கி வைத்தனர்.

Related posts

GL sees govt. bid to wrest control of watchdog committees

Lincoln

State FM calls for report from IR, admits difficulty in punishing racketeers

Lincoln

SL earns USD 883 from rubber exports

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy