Sangathy
News

அரச மாடிக்குடியிருப்புகளின் வீட்டுரிமத்தை விரைவில் மக்களுக்கு வழங்க திட்டம்

அரச மாடிக்குடியிருப்பு வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தை துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக்குடியிருப்பு வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று(22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 2351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

காணி உரிமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

Italy earn late win over Argentina

Lincoln

Kidney racket: Organ transplants suspended at Western Infirmary

Lincoln

எதிர்வரும் 5 ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3% சுருங்கும்: கிறிஸ்டலினா ஜோர்ஜிவா

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy