Sangathy
News

யாழில். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி – ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பு வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார், நேற்றைய தினம் (13) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக 23 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் பிரிவினுள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ்ப்பாணதில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 நபர்களிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related posts

PHIs collect food samples from eateries in Sri Pada area to get to bottom of suspected food poisoning

Lincoln

லொறி – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவன் பலி

Lincoln

அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பொருட்களால் தோல் நோய் அதிகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy