Sangathy
NewsSrilanka

முன்னாள் அரசியல் கைதிக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கடிதம்..!

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (ரிஐடி) அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று நேற்று (10) வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) அவர்களை 12 ஆம் திகதி காலை 9.00 இற்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..,

“விசாரணை பிரிவு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக முகநூல் கணக்கு சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2024 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 12 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இல149, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்ட முகவரியில் விசாரணை பிரிவு ஒன்றின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைக்கின்றோம்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைத் தன்மை வெளிவரும்” : சாணக்கியன்..!

tharshi

Govt. to postpone vote on CBSL Bill due to protests

Lincoln

Former Finance Minister Ronnie de Mel passes away

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy