Sangathy
News

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

சதொச நிறுவனம் நேற்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

1 கிலோ வௌ்ளைபூடு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாவாகும்.

1 கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்கவும் லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக பெயரிட தீர்மானம்

John David

Forced disappearances : Courts moved against Gotabaya again

Lincoln

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீது முழுமையான பகுப்பாய்வு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy