சம்பந்தன் – ஜூலி சங் சந்திப்பு; சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் ( Julie Chung) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், ஏனைய சிறுபான்மையின சமூகங்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள், தேசிய அடையாளம், சீர்திருத்தங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விடயங்களில் தீர்வு காண்பதற்காக முன்னோக்கி பயணித்தல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்த  பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles