சுற்றுலா சென்றவர்கள் மீது பொலிஸார் கடும் தாக்குதல்! இருவர் மருத்துவமனையில் அனுமதி

பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டுக்கு சுற்றுலா சென்றவர்களைச் சிவில் உடையில் அங்கு நின்ற பொலிஸார் கொடூரமாக தாக்கியுள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலாடை இன்றி மது அருந்தியவாறு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் காயமடைந்த மூவரிடமும் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அதிகாரிகள் மந்திகை வைத்தியசாலையில் வைத்து இன்றையதினம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles