பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்து பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கம்

Colombo (News 1st) பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

Previous article
Next article
Colombo (News 1st) பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles