திருமதி கோபாலகிருஷ்ணன் கமலாட்சி

மறைவு – 23 JUN 2023

புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) கொட்டடி, Sri Lanka கொட்டாஞ்சேனை, Sri Lanka

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதி, கொழும்பு கொட்டாஞ்சேனை மேபில்ட் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் கமலாட்சி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 

எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக கலந்த
எம் அம்மாவே! அப்பம்மாவே! அம்மம்மாவே!

பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன்? அம்மா
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்

ஆணிவேராய் எம்மை
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
நாட்கள் 31 ஆனாலும் ஆறவில்லை எம் மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
 

 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles