அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் மீது தாக்குதல்; மாணவர்கள் இருவர் கைது

Colombo (News 1st) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை  பெற்றோர் சிலரும்  மாணவர்களும் இணைந்து தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நேற்று (26) பாடசாலை நிறைவடைந்து வௌியேறிய போது, சில  மாணவர்களும் பெற்றோரும் இணைந்து ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையின் ஒழுக்கக்கோவையை செயற்படுத்துவதில் ஏற்பட்ட முரண்பாடே இந்த தாக்குதலுக்கு காரணம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஏனையோரை தேடும் நடவடிக்கைகளை  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles