ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஹமதுல்லா ஓமர்சாய் 62 ஓட்டங்களை பெற்றார்

அணித்தலைவர் ஹஸ்மதுல்லா ஷாஹிடி 80 ஓட்டங்களை பெற்றார்.

ஏனைய வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காத நிலையில், ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்களை பெற்றது.

ஜாஸ்ப்ரிட் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 61 பந்துகளில் சதம் விளாசியதுடன்,  131 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.

உலகக்கிண்ண தொடர்களில் அதிகூடிய சதங்களை பெற்ற வீரராகவும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிகூடிய சிக்சர்களை பெற்ற வீரராகவும் ரோஹித் சர்மா பதிவானார்.

இஷான் கிஷான் 47 ஓட்டங்களை பெற்றார்.

விராட் கோஹ்லி 55 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles