இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

Colombo (News 1st) இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்தார்.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு 071 66 40 560 எனும் WhatsApp இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் விளைவாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles