மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

Colombo (News 1st) நாளை மறுதினம் (14) முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, மத்திய, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பொகவந்தலாவை பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பொகவந்தலாவையில், 105.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்தறையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவானதால் அக்குரஸ்ஸ, மாலிம்பட, திஹாகொட உள்ளிட்ட பல பகுதிகளில் காணப்பட்ட வௌ்ள நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பான திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

காலி , மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles