3000 விவசாயிகளுக்கு உரம் வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை

Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்தில், 3 மாவட்டங்களில் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களை செய்கையிடும் 3000 விவசாயிகளுக்கு உரங்களை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கிணங்க, விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதியுதவி தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மாத்தளை, குருணாகல், மொனராகலை மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் காய்கறிகள் மற்றும் பிற பயிர்களை செய்கையிடும் விவசாயிகளுக்கே இவ்வாறு உரம் வழங்கப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles