முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு மேலும் ஒரு வழக்கில் தோல்வி

அமெரிக்காவின் முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் ஒரு வழக்கில் தோல்வி கண்டிருக்கிறார்.

அவர் New York Times பத்திரிகைக்கும், சில புலனாய்வுச் செய்தியாளர்களுக்கும் சுமார் 400,000 டாலர் இழப்பீடு தரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அந்தப் பத்திரிகைக்கும் செய்தியாளர்களுக்கும் எதிராகத் டிரம்ப் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டுவந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

2018ஆம் ஆண்டில் அந்தப் பத்திரிகையில் வெளியான டிரம்ப்பின் நிதி நிலவரம் பற்றிய செய்திக்கு எதிராக அவர் நீதிமன்றத்துக்குச் சென்றார்.

அவருடைய வருமான வரி தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி அந்தச் செய்தி என்று டிரம்ப் வழக்கு தொடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles