தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்..!

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துவரும் நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று (12) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில், தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

கலந்துரையாடலின் போது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் உப குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles