5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வரும் கடைக்குச் சென்றுள்ளார். இதன்போது, சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று குறித்த சந்தேகநபர் இந்த பாலியல் தொல்லையை இணைத்துள்ளார் என்று பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயாரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.
