ஒன்லைன் மூலம் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்தவர் யாழில் கைது

ஒன்லைன் கொரியர் சேவை மூலமாக போதை மாத்திரைகளை கொண்டுவந்து விற்பனை செய்த ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியான வண்ணார்பண்ணை பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைது செய்ய்பபட்டார். அவரிடமிருந்து ஆயிரத்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

ஒன்லைன் கொரியர் சேவை மூலம் கொழும்பிலிருந்து குருநகர் தபால் நிலையத்துக்கு அனுப்பப்பட்ட பொதியை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸார் கைப்பற்றி சோதனையிட்டனர். பொதியிலிருந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், அந்த போதை மாத்திரைகளை கொள்வனவு செய்தார் என்று கூறப்படும் சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles