நயினாதீவில் கண்ணாடி இழைப்படகில் பயணித்த ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.
நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் (வயது 48)என்பவரே படகில் பயணம் செய்த வேளை கடலில் மூழ்கி மரணம் அடைந்துள்ளார்.
அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் , பயணிகள் படகினை தவறவிட்டமையால் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகம் நோக்கி சிறிய கண்ணாடி இழைப்படகு ஒன்றின் மூலம் பயணம் செய்தவேளை படகின் பின் இருக்கை பகுதியில் அமர்ந்திருந்துள்ளார்.
அதிகமான காற்று காரணமாக கடல் கொந்தளிப்பால் படகு அலையில் மேல் எழுந்து கீழே விழும் வேளை அதிபர் கடலில் தவறி வீழ்ந்து இறந்துள்ளார்.
கடல் கொந்தளிப்பு காரணமாக அதிபரை காப்பாற்ற முடியாது போனதாக அறிய முடிகிறது. புங்குடுதீவில் றோ. க பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது
