இஸ்ரேல்-ஹமாஸ் போா் : தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் பலி..!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் அந்நாட்டு இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனர்; 3 போ் காயமடைந்தனா். பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஹமாஸ் குழுவினர் எனச் சந்தேகிக்கப்படும் நபா்களைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவத்தினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கியதில் இருந்து 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 460 பலஸ்தீனா்கள் மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், துபாஸ் நகரத்தையொட்டிய அல்-பரா அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதலில் ஹமாஸின் உள்ளூா் தளபதியான முகமது தராக்மே உயிரிழந்தாா்.சோதனையின்போது முகமது தராக்மே காரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து, இஸ்ரேலிய இராணுவ வீரா்களுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தராக்மே கொல்லப்பட்டாா். இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்த தராக்மே திட்டமிட்டிருந்தாக இராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.

ராணுவ வீரா்களுக்கும், ஆயுதமேந்திய பலஸ்தீனா்களுக்கும் இடையே நடந்த மோதலில், மற்றொரு பலஸ்தீனா் நேற்று கொல்லப்பட்டாா். 3 போ் காயமடைந்துள்ளனர்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles