நிர்மலா தேவி வழக்கு : மாணவிகளிடம் தவறா பேசியது இவர்களுக்காக தான் – ப்ளீஸ் தண்டனையை ரத்து பண்ணுங்க..!

பேராசிரியை நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட கோரிய வழக்கில் விருதுநகர் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை, தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றம் ஏப்ரல் 30 ஆம் திகதி தீர்ப்பளித்தது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் நிர்மலா தேவி அடைக்கப்பட்டார்.

முன்னதாக இந்த வழக்கு ஏப் 29 ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் 2ஆவது, 3ஆவது குற்றவாளிகளான மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், “கல்லூரி மாணவிகளை, பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில் எனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும். நீதி மன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன்.

இந்த வழக்கில் , 2ஆவது, 3ஆவது குற்றவாளிகளான மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றச் சாட்டு நிருபிக்கப்பட வில்லை என கூறி விடுதலை செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காக தான், நான் மாணவிகளிடம், செல் போனில் பேசி முயற்சி செய்தேன். யாரும் பாதிக்கப்பட வில்லை. குற்றவாளிகளை விடுதலை செய்த பிறகு, என்னை பல பிரிவுகளில் தண்டித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல.

எனவே, இந்த வழக்கில், எனக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட. மகிளா நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” தெரிவித்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles