விஜய்யின் `சச்சின்’ படம் ரீ-ரிலீஸ்..!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில் விஜய்யின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. வில்லு படமும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் விஜய் நடித்த `சச்சின்’ படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

`சச்சின்’ படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார்.

இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

‘சச்சின்’ சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பார்த்தது. அப்போது அப்படத்துடன் ரஜினியின் ‘சந்திரமுகி’ கமல்ஹாசனின் `மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles