டி20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது பயிற்சி போட்டி : இலங்கை அணி வெற்றி..!

டி20 உலகக்கிண்ணத் தொடரின் இலங்கை அணி பங்கேற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணியால் 18 ஓவர்கள் 2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

தசுன் சானக 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இலங்கையின் முதல் போட்டி தென்னாபிரிக்காவுக்கு எதிராக திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles