ஆப்கான் அணி இமாலய வெற்றி..!

2020 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற உகாண்டா அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ் 76 ஓட்டங்களையும் சத்ரன் 70 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் ஃபசல்ஹக் பாரூக்கி 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles