ஆட்சியில் அமர்வது யார்? பரபரப்பில் டெல்லி..!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அந்த வகையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல்தான் உருவாகி இருக்கிறது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் தனித்தனியே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்த நடவடிக்கைகள் காரணமாக டெல்லியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles