Sangathy
World Politics

அமீரகத்தின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை : பின்னணியில் தந்தையின் பாச போராட்டம்..!

இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக ஒரு தரப்பில் கூறப்பட்டாலும் அப்படியெல்லாம் இல்லை பாசம் தான் என்றைக்குமே என்ற வகையில் ஒரு சம்பவம் அபுதாபியில் நிகழ்ந்துள்ளது.

அரிய வகையால் நோயால் பாதிக்கப்பட்டு முதல் குழந்தை உயிரிழந்த நிலையில், இரண்டாவது குழந்தைக்கும் அதே நிலை ஏற்பட்டபோது உறைந்து போன தந்தை செய்த செயலால் அக்குழந்தை இன்று மகிழ்ச்சியில் உள்ளது என்றால் அதற்கு ஈடுஇணை இல்லை…

அபுதாபியில் 14 ஆண்டுகளாக வசித்து வருபவர் இம்ரான் கான். இந்தியரான இவருடைய 4 வயது மகள் ரசியா, குழந்தைப் பருவத்தில் தோன்றும் ‘பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3’ என்ற கல்லீரலை தாக்கும் அரியநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், உறைந்து போன இம்ரான் கான், சிறுமியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு அறுவைசிகிச்சைக்கு 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 27 லட்சம்) செலவாகும் என கூறப்பட்டது.

முன்னதாக, இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நோயால் தங்கள் முதல் மகளை இழந்ததால், 2-வது மகளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று இம்ரான் கான் முடிவு செய்தார். இதற்காக அமீரக அரசின் தொண்டு அமைப்பான எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட்டைத் தொடர்புகொண்டு உதவி கேட்டார்.

இம்ரான் கானின் நிலையை கண்ட தனியார் மருத்துவமனையும் தங்களது பங்களிப்புக்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. அடுத்ததாக, கல்லீரல் தானம் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கல்லீரல் தானம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிறுமியின் தந்தையான இம்ரான் கானே மகளுக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தர முன்வந்தார்.

இதையடுத்து, அபுதாபியில் உள்ள புர்ஜீல் மெடிக்கல் சிட்டியில் (பிஎம்சி) பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ரெஹான் சைஃப் தலைமையிலான மாற்று அறுவை சிகிச்சை குழு, கடந்த புதன்கிழமை அன்று சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தனர்.

ஒரே நேரத்தில் நன்கொடையாளர் மற்றும் பெறுநர் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தது. இதன் பின் சிறுமியின் உயிருக்கு பாதிப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார்.

இதுகுறித்து டாக்டர் ரெஹான் சைஃப் கூறுகையில், “ரசியாவை தாக்கிய நோய் மரபணு மாற்றத்தால் ஏற்படுவதாகும். இந்த நோய் உலகில் லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இது பித்த சுரப்பு மூலம் அசாதாரண நிலைக்கு வழிவகுக்கிறது. இறுதியில் கல்லீரலை சேதப்படுத்துகிறது. இது, குழந்தை பருவத்தில் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகளாக வெளிப்படுகிறது.

இதனால், காது கேளாமை, வயிற்றுப்போக்கு மற்றும் கணையத்தில் வீக்கம் காணப்படும். இதில் வெற்றிபெற்றது நாட்டின் சுகாதாரத்துறைக்கு ஒரு மைல்கல். இது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மருத்துவச் சமூகத்திற்கு ஒரு மகத்தான சாதனை. ரசியா இனி பள்ளிக்குச் சுதந்திரமாகப் போக முடியும். எல்லாக் குழந்தைகளைப் போலவே அவராலும் இயல்பாக வாழ முடியும்” என கூறினார்.

மகளின் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு பேசிய தந்தை இம்ரான் கான், “எனது மகளின் கண் நோயால் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போதுதான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். இனி, ஆபத்தில்லை” என கண்ணீர்மலகக் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

பீஹார் கோயிலில் கூட்ட நெரிசல் : 7 பேர் பலி – 35 பேர் படுகாயம்..!

Tharshi

கப்பல் மோதியதில் நொறுங்கி விழுந்த பாலம்..!

tharshi

38 வயது இளைஞரின் உடல் அமைப்பு கொண்ட 61 வயது முதியவர்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy