Sangathy
World Politics

அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்.. டிரம்ப் – ஒபாமா கூறியது இதுதான்..!

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பும் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அதிபர் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக பேச்சிலும் செயல்களிலும் தடுமாற்றத்துடன் இருந்து வருவது அவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்தானா என்ற சந்தேகத்தை அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எழச் செய்தது.

இதற்கிடையில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க செய்துள்ளதாக பார்க்கமுடிகிறது, எனவே பைடன் அதிபராக போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று ஜநாயனாய கட்சியினர் பயந்தனர்.

இந்த நிலையில்தான் அதிபர் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய- ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அவர் முன்மொழிந்துள்ளார். கமலா ஹாரிஸுக்கு ஜனநாய கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான். அதை சுட்டிக்காட்டி டிரம்பும் பைடனை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ஊழல் நிறைந்த தீவிரவாத ஜனநாயகவாதிகள் அவரை தூக்கியெறிந்துள்ளனர். நிலையற்ற ஜோ பைடன் அமரிக்க வரலாற்றிலேயே இது வரை இருந்த மிகவும் மோசமான அதிபர். தெற்கு எல்லை விவகாரத்தில் இருந்து , தேச பாதுகாப்பு, சர்வதேச நிலைப்பாடுவரை நமது நாட்டை அழிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர் செயல்பட்டுள்ளார்.

பைடனை சுற்றியுள்ளவர்கள் அவரது உடல் மற்றும் மன நிலை, நியாபகமறதி குறித்து அமெரிக்காவிடம் பொய் சொல்லிவந்துள்ளனர். இப்போது [பைடன் விலகியுள்ள நிலையில்] மீதமுள்ளவர்களும் அவரைப் போன்றவரே ஆவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப், அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர் சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒருவரின் சிரிப்பை வைத்து நிறைய விஷயங்களை சொல்லிவிட முடியும். She is nuts. அவரை வெல்வது மிகவும் சுலபம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜனநாயகக் காட்சியைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து பேசுகையில்,

சண்டையில் இருந்து பைடன் எப்போதும் பின்வாங்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலை புரிந்துகொண்டு அவர் எடுத்துள்ள இந்த முடிவு அவரது வாழ்வில் எடுத்த மிகவும் கடினமான முடிவாக இருக்கும். அமரிக்காவுக்கு நன்மை பயக்காது என்றால் இந்த முடிவை அவர் எடுத்திருக்க மாட்டார் என எனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

 

Related posts

புதின் வட கொரிய அதிபருக்கு பரிசளித்த காரில் தென் கொரிய பாகங்கள் : வெடித்தது சர்ச்சை..!

Tharshi

கணவரின் ஆனிவர்சரி கிஃப்ட்டில் லாட்டரி வாங்கிய மனைவிக்கு ரூ. 8.22 கோடி பரிசு..!

tharshi

இந்தோனேசியாவில் மண்சரிவு : 19 பேர் உயிரிழப்பு – 7 பேர் மாயம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy