Sangathy
Sports

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி..!

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (26) நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் Muneeba Ali அதிகூடிய ஓட்டங்களாக 37 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani மற்றும் Kavisha Dilhari ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்நிலையில் 141 ஓட்டங்களை பெற்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணி துடுப்பெடுத்தாட அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு141 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் Chamari Athapaththu அதிகூடிய ஓட்டங்களாக 63 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Sadia Iqbal 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Related posts

Russians, Belarusians to compete as ‘neutrals’ at 2024 Paris Olympics: IOC

John David

அதிக தூரம் சிக்ஸ் அடித்து தினேஸ் கார்த்திக் சாதனை..!

tharshi

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இயன் பெல்..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy