Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஅதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள் : 600 முறைப்பாடுகள் பதிவு..!

அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள் : 600 முறைப்பாடுகள் பதிவு..!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை) 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 196 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 385 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular