Monday, February 2, 2026
HomeMain Newsபொதுத் தேர்தல் முறைப்பாடுகள்: வேட்பாளர்கள் அறுவர் உட்பட 191 பேர் கைது

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள்: வேட்பாளர்கள் அறுவர் உட்பட 191 பேர் கைது

பொதுத் தேர்தல் தொடர்பில் 1259 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் 13 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 168 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கமைய 191 பேர் கைது செய்யப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 06 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

மேலும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 45 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றச்செயல்கள் தொடர்பில் 30 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 138 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular