கொழும்பு கோட்டை பகுதி விருந்தகமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்..!

கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள 9 மாடிகளைக் கொண்ட விருந்தகமொன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

9 மாடிகளைக் கொண்ட விருந்தகத்தின் 7 வது மாடியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது.

குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகத் தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விருந்தகத்திற்குள் சிக்கியிருந்த வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles