Monday, February 2, 2026
HomeSportsபாகிஸ்தானுடனான ரி20 தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா...!

பாகிஸ்தானுடனான ரி20 தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா…!

பாகிஸ்தான் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட தொடரை தென்னாபிரிக்க அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. அப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டி ஆரம்பமாகுவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை நிற்காமல் பெய்ததால் போட்டி இரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular