Monday, February 2, 2026
HomeSportsசாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!

சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான குறித்த குழாமில் சுப்மன் கில், விராட் கோலி, யசஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டெல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த தொடருக்கான இந்திய அணியின் உபதலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

குறித்த தொடரானது மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular