Monday, February 2, 2026
HomeSportsசாம்பியன்ஸ் டிராபி போட்டோஷூட் ரத்து செய்த ஐ.சி.சி.?

சாம்பியன்ஸ் டிராபி போட்டோஷூட் ரத்து செய்த ஐ.சி.சி.?

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளன.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கும் முன்பு இதில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ளும் போட்டோஷூட் நடைமுறையை ஐ.சி.சி. ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக போட்டோஷூட்டில் பங்கேற்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், போட்டோஷூட் நிகழ்ச்சியை ஐ.சி.சி. ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

போட்டோஷூட் ரத்து செய்யப்பட்ட நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழா இந்த தொடரின் முதல் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்பே நடைபெறும் என்று தெரிகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular